-
அகல இருந்தால்
நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
-
அகல உழுகிறதை விட
ஆழ உழு.
-
அகல் வட்டம் பகல்
மழை.
-
அசைந்து தின்கிறது
யானை, அசையாமல் தின்கிறது வீடு.
-
அச்சமில்லாதவன்
அம்பலம் ஏறுவான்.
-
அச்சாணி இல்லாத
தேர் முச்சாணும் ஓடாது.
-
அஞ்சிலே வளையாதது
ஐம்பதிலே வளையுமா?
-
அடக்கமே
பெண்ணுக்கு அழகு.
-
அடக்கம் உடையார்
அறிஞர், அடங்காதவர் கல்லார்.
-
அடாது செய்தவன்
படாது படுவான்.
-
அடி நாக்கிலே
நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
-
அடுத்த
வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை
வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
-
அணில் கொம்பிலும்,
ஆமை கிணற்றிலும்.
-
அணை கடந்த வெள்ளம்
அழுதாலும் வாராது.
-
அத்திப் பழத்தைப்
பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
-
அந்தி மழை
அழுதாலும் விடாது.
-
அப்பன் அருமை
மாண்டால் தெரியும்.
-
அப்பியாச
வித்தைக்கு அழிவில்லை.
-
அயலூரானுக்கு
ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
-
அரசன் இல்லாத நாடு
அச்சில்லாத தேர்.
-
அரிசி
ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
-
அருமையற்ற
வீட்டில் எருமையும் குடியிருக்காது.
-
அழிந்த கொல்லையில்
குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
-
அழுகிற ஆணையும்,
சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
-
அழுத பிள்ளை பால்
குடிக்கும்.
-
அழுதாலும் பிள்ளை
அவளே பெற வேண்டும்.
-
அளக்கிற நாழி
அகவிலை அறியுமா?
-
அறச் செட்டு முழு
நட்டம்.
-
அள்ளிக்
கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
-
அறக்கப் பறக்க
பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.
-
அறப்படித்தவன்
அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும்
மாட்டான்.
-
அறமுறுக்கினால்
அற்றும் போகும்.
-
அறிந்தறிந்து
செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.
-
அறிய அறியக்
கெடுவார் உண்டா?
-
அறிவில்லார்
சிநேகம் அதிக உத்தமம்.
-
அறிவீனர் தமக்கு
ஆயிரம் உரைக்கினும் அவம்.
-
அறிவீன இடத்தில்
புத்தி கேளாதே.
-
அறிவு இல்லார்
தமக்கு ஆண்மையுமில்லை.
-
அறிவுடையாரை
அரசனும் விரும்புவான்.
-
அறுபத்து நாலடிக்
கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான்
தியாகம் வாங்க வேண்டும்.
-
அறுப்புக்
காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
-
அற்ப அறிவு அல்லற்
கிடம். அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
-
அன்று எழுதியவன்
அழித்து எழுதுவானா?
-
அன்று குடிக்கத்
தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
-
அன்னைக்கு
உதவாதவன் யாருக்கும் ஆகான்.
-
அன்னம் இட்டவர்
வீட்டில் கன்னம் இடலாமா?
-
ஆய்ந்து பாராதான்
காரியந் தான் சாந்துயரந் தரும்.
-
ஆரால் கேடு,
வாயால் கேடு.
-
ஆரியக்
கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
-
ஆலும் வேலும்
பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்]
இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
-
ஆலை இல்லாத ஊரிலே
இலுப்பைப் பூச்சக்கரை.
-
ஆழமறியாமல் காலை
இடாதே.
-
ஆவும் தென்னையும்
ஐந்து வருடத்தில் பலன் தரும்.
-
ஆளனில்லாத
மங்கைக்கு அழகு பாழ்.
-
ஆள் கொஞ்சமானாலும்
ஆயுதம் மிடுக்கு.
-
ஆறிலுஞ் சாவு
நூறிலுஞ் சாவு.
-
ஆறின கஞ்சி பழங்
கஞ்சி.
-
ஆறு
கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ
யார் நான் யார்?
-
ஆற்றிலே
போட்டாலும் அளந்து போடு.
-
ஆறுகெட நாணல் இடு,
ஊரு கெட நூலை விடு.
-
ஆறு போவதே போக்கு
அரசன் சொல்வதே தீர்ப்பு.
-
ஆனை கறுத்தால்
ஆயிரம் பொன்.
-
ஆனைக்கு ஒரு காலம்
பூனைக்கு ஒரு காலம்.
-
ஆனைக்கும்
அடிசறுக்கும்.
-
ஆனை படுத்தால் ஆள்
மட்டம்.
-
ஆனை வரும் பின்னே.
மணி ஓசை வரும் முன்னே...
-
இக்கரை மாட்டுக்கு
அக்கரை பச்சை.
-
இங்கே தலை
காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
-
இஞ்சி இலாபம்
மஞ்சளில்.
-
இடம் கொடுத்தால்
மடம் பிடுங்குவான்.
-
இட்ட உறவு எட்டு
நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு.
-
இட்டுக் கெட்டார்
எங்குமே இல்லை.
-
இட்டார் பெரியோர்
இடாதார் இழி குலத்தோர்.
-
இமைக்குற்றம்
கண்ணுக்குத் தெரியாது.
-
இரக்கப் போனாலும்
சிறக்கப் போ.
-
இரண்டு ஓடத்தில்
கால் வைக்காதே.
-
இரவற் சீலையை
நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
-
இராகு திசையில்
வாழ்ந்தவனும் இல்லை. இராச திசையில்
கெட்டவனுமில்லை.
-
இராசா மகளானாலும்
கொண்டனுக்கு பெண்டுதான்.
-
இரும்பு பிடித்த
கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
-
இராமனைப்போல்
இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும்
இருப்பான்.
-
இருவர் நட்பு
ஒருவர் பொறை.
-
இல்லாது பிறாவது
அள்ளாது குறையாது.
-
இழவுக்கு வந்தவள்
தாலி அறுப்பாளா?
-
இழுக்குடைய
பாட்டிற்கு இசை நன்று.
-
இளங்கன்று
பயமறியாது
-
இளமையிற் கல்வி
கல் மேல் எழுத்து.
-
இளமையில் சோம்பல்
முதுமையில் வருத்தம்.
-
இறங்கு பொழுதில்
மருந்து குடி
-
இறுகினால் களி ,
இளகினால் கூழ்.
-
இறைக்க ஊறும்
மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
-
இறைத்த கிண்று
ஊறும், இறையாத கேணி நாறும்.
-
இனம் இனத்தோடே
வெள்ளாடு தன்னோடே
-
இன்றைக்கு இலை
அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
-
ஈக்கு விடம்
தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
-
ஈட்டி எட்டு முழம்
பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
-
ஈயார் தேட்டைத்
தீயார் கொள்வர்.
-
ஈர நாவிற்கு
எலும்பில்லை.
-
உடல் உள்ள வரையில்
கடல் கொள்ளாத கவலை.
-
உடம்பு போனால்
போகிறது கை வந்தால் போதும்.
-
உடைமையும்
வறுமையும் ஒரு வழி நில்லா.
-
உடையவன் பாரா வேலை
ஒரு முழங் கட்டை.
-
உடைத்த சங்கு
ஊத்துப் பறியுமா?
-
உண்ட உடம்பிற்கு
உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
-
உட்கார்ந்தால்
அல்லவா படுக்க வேண்டும்.
-
உண்டு கொழுத்தால்
நண்டு வலையில் இராது.
-
உத்திராடத்தில்
ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
-
உரலில் அகப்பட்டது
உலக்கைக்கு தப்புமா?
-
உருட்டும்
புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
-
உலோபிக்கு இரட்டை
செலவு.
-
உழுகிற நாளில்
ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள்
தேவையில்லை.
-
உழுதவன் கணக்குப்
பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
-
உளவு இல்லாமல்
களவு இல்லை.
-
உள்ளது சொல்ல ஊரு
மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல.
-
உள்ளது போகாது
இல்லது வாராது.
-
உள்ளம் தீயெரிய
உதடு பழஞ் சொரிய
-
உறியிலே வெண்ணெய்
இருக்க நெய்க்கலைவானேன்
-
உறவு போகாமல்
கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
-
உத்தமனைச் சிநேகம்
இழுக்கும்.
-
ஊணுக்கு
முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.
-
ஊண் அற்றபோது
உடலற்றது.
-
ஊமையாய் இருந்தால்
செவிடும் உண்டு.
-
ஊர் உண்டு
பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
-
ஊர் வாயை மூட
உலைமுடி இல்லை.
-
ஊழி பெயரினும்
ஊக்கமது கைவிடல்.
-
ஐங்காயம் இட்டு
அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம்
பேய்ச்சுரைக்காய்க்கு.
-
ஐயமான காரியத்தைச்
செய்தல் ஆகாது.
-
ஐயர் வருகிறவரை
அமாவாசை நிற்குமா?
-
ஒட்டக்கூத்தன்
பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
-
ஓதிய மரம் தூணாமோ,
ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
-
ஒரு காசு பேணின்
இரு காசு தேறும்
-
ஒரு குடம்
பாலுக்கு ஒரு துளி பிரை
-
ஒரு கை தட்டினால்
ஓசை எழும்புமா?
-
ஒரு கை (அல்லது
வெறுங்கை) முழம் போடுமா?
-
ஒரு நன்றி
செய்தவரை உள்ள அளவும் நினை
-
ஒரு நாள்
கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
-
ஒரு பானைச்
சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
-
ஒரு பொய்யை மறைக்க
ஒன்பது சொல்லுதல்.
-
ஒருமைப் பாடில்லாத
குடி ஒருமிக்கக் கெடும்.
-
ஒருவர் அறிந்தால்
இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
-
ஒருவனாய்
பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
-
ஒழுக்கம்
உயர்குலத்தின் நன்று.
-
ஒளிக்கப் போயும்
தலையாரி வீட்டிலா!
-
ஓசை பெறும்
வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
-
ஓடிப்போனவனுக்கு
ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு
அட்டமத்திலே சனி.
-
ஓடுகிறவனைக்
கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
-
ஓட்டைக்
கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
-
ஓதாதார்க்கு இல்லை
உணர்வொடு ஒழுக்கம்.
-
ஓதுவார் எல்லாம்
உழுவான் தலைக்கடையிலே.
-
ஓர் ஊருக்கு ஒரு
வழியா? ஒன்பது வழி.
-
ஓர் ஊர்ப்பேச்சு
ஓர் ஊருக்கு ஏச்சு.
-
ஒளவை சொல்லுக்கு
அச்சம் இல்லை.